மேலும் செய்திகள்
மெயின் பஜார் மதுக்கடைகளை அகற்ற த.வெ.க., வலியுறுத்தல்
5 minutes ago
கம்மாத்தியில் வயல் மற்றும் காரை சேதப்படுத்திய மக்னா
6 minutes ago
ஊட்டி: ஊட்டியில் சாரல் மழை, மேகமூட்டத்தால் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 'தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்குள் நுழைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்,' என, வானிலை மையம் கணித்துள்ளது. இதன் எதிரொலியாக, ஊட்டி, குன்னுாரில் அவ்வப்போது சாரல் மழையுடன் கடும் மேகமூட்டம் நிலவி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 15 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை, 11 டிகிரி செல்சியசாக உள்ளது. கடும் மேகமூட்டத்தால் பகல் நேரங்களில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்களை இயக்க வேண்டிய சூழல் உள்ளது. கடும் குளிர் நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது.
5 minutes ago
6 minutes ago