உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் மலை பகுதிகளில் ஹெலிகாப்டர் பயிற்சி

குன்னுார் மலை பகுதிகளில் ஹெலிகாப்டர் பயிற்சி

குன்னுார்;குன்னுாரில் நேற்று பைலட்களுக்கான ஹெலிகாப்டர் இயக்கும் பயிற்சி நடந்தது.குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி அருகே ஜிம்கானா மைதானத்தில் பைலட்களுக்கு ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை மேகமூட்டமின்றி தெளிவான காலநிலை இருந்த நிலையில், கோவை சூலுார் விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் ஜிம்கானா மைதானத்திற்கு ஹெலிகாப்டர் வந்திறங்கியது.தொடர்ந்து, 10 முறை வானில் வட்டமடித்தது. தரையில், இறக்கி ஏற்றுவது மரங்கள் சூழ்ந்த மலை பகுதியின் மேற்பகுதியில் இயக்கி பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து சூலூர் விமான நிலையம் சென்றது. இதனை உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி