உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அனுமதி கேட்டு உண்ணாவிரத போராட்டம்

ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அனுமதி கேட்டு உண்ணாவிரத போராட்டம்

கூடலுார்; கூடலுார் ஆமைகுளம் - கத்தரித்தோடு சாலையில் ஆற்றின் குறுக்கே, பாலம் அமைக்க, வனத்துறையின் அனுமதி கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கூடலுார் கோழிக்கோடு சாலை ஆமைக்குளம், அரசு கல்லுாரி வழியாக கத்தரித்தோடு பகுதிக்கு சாலை பிரிந்து செல்கிறது. சாலை குறுக்கே, உள்ள ஆற்றை கடந்து செல்ல வசதியாக, பாலம் அமைக்க நெல்லியாளம் நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. வனத்துறையினர், 'அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது,' என, கூறி, பாலம் கட்ட அனுமதி மறுத்ததுடன், வனத்துறை சார்பில் ஆற்றின் குறுக்கே, 4 அடி அகலத்தில் அமைத்து தருவதாக தெரிவித்தனர்.இதனை ஏற்க மறுத்த மக்கள், சிறிய வாகனங்கள் சென்றுவர கூடிய அகலத்தில் பாலம் அமைக்க அனுமதி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில், நாடுகாணியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, ஏரியா செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வாசு துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட குழு உறுப்பினர் முகமது, ரவிக்குமார், ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் மணிகண்டன், ஷாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை