உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலூரில் எரியாத ஹைமாக்ஸ் தெருவிளக்கு

பந்தலூரில் எரியாத ஹைமாக்ஸ் தெருவிளக்கு

பந்தலூர்: பந்தலூர் பஜார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, ஹைமாக்ஸ் தெருவிளக்கு, பழுதடைந்து எரியாததால் இருள் சூழ்ந்த பகுதியாக மாறி வருகிறது. பந்தலூர் பஜார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஹைமாக்ஸ் தெருவிளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லியாளம் நகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வரும், இந்த தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. தீபாவளி பொருட்கள் வாங்க கடைகளுக்கு வந்த மக்கள், இரவில் இருள் சூழ்ந்த, பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள், புகார் தெரிவித்தும் அது குறித்து கண்டுகொள்ளாததால் மக்கள் சிரமத்துடன் வாகனங்களுக்கு காத்திருந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. எனவே பழுதடைந்த தெரு விளக்கு சீரமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை