உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி :தன்னம்பிக்கை குறித்து பயிற்சி

ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி :தன்னம்பிக்கை குறித்து பயிற்சி

ஊட்டி;ஊட்டியில் உயர் கல்விக்கான ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில், கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசுகையில்,''அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும், கல்லுாரி மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், உதவி தொகை வழங்கப்படுகிறது. கல்வியின் மகத்துவத்தையும், அரசு மற்றும் தனியார் அறக்கட்டளைகள் வழங்கும் கல்வி ஊக்க தொகையின் மூலம், மாணவர்கள் தங்களையும், சமூகத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மாணவர்களுக்கு விருது, கல்வி வழிகாட்டிகள் மற்றும் தன்னம்பிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., மகராஜ், கோவை தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லுாரி தலைமை நிர்வாக அலுவலர் தமிஷ் அகமது, முதல்வர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை