| ADDED : ஜன 21, 2024 10:49 PM
குன்னூர்:குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலை பழவியல் நிலைய பண்ணைக்கு செல்லும் நுழைவு வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே தோட்டக்கலை துறையின் பழ பண்ணை உள்ளது. இங்கு பேரி, பீச், மங்குஸ்தான், பிளம்ஸ் உட்பட பல்வேறு பழங்கள் விளைகிறது. இதன் நுழைவுவாயிலில் புதிகாக துவங்கப்பட்ட தனியார் பேக்கரியின் பிரிட்ஜ் வைத்து கேட் மறைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பொருட்களை வாங்கி வர சிரமப்படுகின்றனர். இங்குள்ளதோட்டக்கலை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனம் காட்டுவதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாரபட்சம் பார்க்காமல் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.