உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பிரசவத்தின் போது குழந்தை இறப்பு

 பிரசவத்தின் போது குழந்தை இறப்பு

பாலக்காடு: பாலக்காடு அருகே, பிரசவத்தின் போது குழந்தை இறந்ததற்கு, மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் வண்டித்தாவளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ஆனந்தி. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக சித்தூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில சிக்கல்கள் கண்டறிந்து, நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். ஆனால், பிரசவ வலி அதிகரித்து கர்ப்பப்பையில் இருந்து சிசு வெளியே வந்ததால், உடனடியாக தாலுகா மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. குழந்தையின் இறப்புக்கு தாலுகா மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என நாராயணன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவர் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்தார். அதேநேரத்தில், சிகிச்சையில் எந்தவித அலட்சியமும் இல்லை, மருத்துவமனையில் அனுமதிக்க வரும்போதே குழந்தையின் கால் வெளியே வந்திருந்தது. அதனால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது, என, தாலுகா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி