உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெண்கள் சுயமாக வருவாய் ஈட்ட முன் வருவது அவசியம்

பெண்கள் சுயமாக வருவாய் ஈட்ட முன் வருவது அவசியம்

பந்தலுார், : பந்தலுார் அருகே உப்பட்டியில், 'ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில், ஏழை பெண்களுக்கு, இலவசமாக தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆறு மாதமாக பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டிரஸ்ட் நிர்வாகி ஜான்சிராணி வரவேற்றார். இயக்குனர் விஜயன் சாமுவேல் தலைமை வகித்து பேசினார்.'ரெப்கோ' வங்கி மேலாளர் அஜய் பேசுகையில், ''பெண்கள் சுய தொழில் தொடங்க அனைத்து வங்கிகளும், கடன் தர தயாராக உள்ள நிலையில் அதனை முறையாக பெற்று, சுய தொழில் செய்து வருவாய் ஈட்ட முன் வரவேண்டும்,''என்றார்.பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை வழங்கி எம்.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளி முதல்வர் கவிதா பேசுகையில், ''சமுதாய வளர்ச்சிக்கு பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றாலும், ஆண்களும் அதற்கு துணையாக உள்ளனர். பெண்கள் இதுபோன்ற பயிற்சிகளை பெற்று, வீடுகளில் முடங்காமல் அதனை முறையாக பயன்படுத்தி, சமுதாயத்தில் தங்களின் பங்களிப்பு எத்தகையது, என்பதை வெளிக்காட்ட தயக்கம் இன்றி முன் வர வேண்டும்,'' என்றார். தையல் பயிற்சி ஆசிரியர் சுலோச்சனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ