உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காரமடை தேர்த்திருவிழா கருத்து கேட்பு கூட்டம்

காரமடை தேர்த்திருவிழா கருத்து கேட்பு கூட்டம்

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகள் அதிக அளவில் செய்து கொடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கூறினர். காரமடை அரங்கநாதர் கோவில், மாசி மகத் தேர்த்திருவிழா, 17ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய விழாவாக 24ம் தேதி தேரோட்டமும், 25ம் தேதி தண்ணீர் மற்றும் பந்த சேவையும் நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களை விட, தண்ணீர், பந்த சேவை விழாவுக்கு, லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். இவ்விழா குறித்து, அறங்காவலர்கள், பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம், காரமடை அரங்கநாதர் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, நகராட்சி கமிஷனர் மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் மிராசுதாரர்கள், கோவில் அர்ச்சகர்கள், பொது மக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் பேசுகையில்,' கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடங்கள் ஆகிய அடிப்படை வசதிகளை அதிகம் செய்து கொடுக்க வேண்டும். மின்சாரம் தடையில்லாமல், 24 மணி நேரமும் வழங்க வேண்டும். தேர் செல்லும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைகள் வைக்க அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி