உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எல்லையோர கிராமங்களில் கும்கிகள் கேரளா வனத்துறை நடவடிக்கை

எல்லையோர கிராமங்களில் கும்கிகள் கேரளா வனத்துறை நடவடிக்கை

பந்தலுார்,; தமிழக எல்லையை ஒட்டிய கேரளா மாநிலத்தில், காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வராமல் தடுக்கும் வகையில், கும்கி யானைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தமிழக எல்லையான பாட்டவயல் மற்றும் நம்பியார்குன்னு சோதனை சாவடிகளை ஒட்டி கேரளா மாநிலம், வயநாடு சீரால் கிராம பகுதி அமைந்துள்ளது.வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமத்திற்கு,அடிக்கடி யானைகள் வந்துசெல்லும் நிலையில், கடந்த,10ம் தேதி இரவு மானு என்றபழங்குடியின இளைஞரை யானை தாக்கி கொன்றது. இதனால், இப்பகுதிக்கு காட்டு யானைகள் வராமல் தடுக்கும் வகையில், கேரளா மாநில வனத்துறையினர் கும்கி யானைகள் விக்ரம், பரத் ஆகியவற்றை நிறுத்தி உள்ளனர். யானைகள் ஊருக்குள் வந்தால் அதனை விரட்டவும் தயார் நிலையில் வனக்குழுவினர் உள்ளனர். இந்நிலையில், காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வரக்கூடும் என்ற நிலையில், தமிழக வனத்துறையினரும் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை