கேரளா போலீஸ்காரர் ஊட்டி லாட்ஜில் தற்கொலை
ஊட்டி; கேரளா மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் ஆதர்ஷ், 39; அங்கு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன், ஆதர்ஷ் கொல்லம் பகுதியில் மொபைல்போன் கடை வைத்துள்ளார்.அப்போது கொல்லத்தை சேர்ந்த, ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்த, ஆன்சி பின்னு, 35, என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது.ஆதர்ஷ்க்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை தனது காதலியிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.இந்நிலையில், ஆதர்ஷ் மற்றும் ஆன்சி இருவரும் நேற்று முன்தினம் ஊட்டி வந்து அறை எடுத்து தங்கினர். நேற்று காலை காதலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆன்சி, பிளேடால் தனது கையை கிழித்துக் கொண்டார். தொடர்ந்து, அறையை விட்டு வெளியேறினார். ஆதர்ஷ் அங்கிருந்த பெட்ஷீட்டை கிழித்து துாக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஊட்டி பி 1 போலீசார் விசாரிக்கின்றனர். ஆன்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.