மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
10 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
11 hour(s) ago
ஊட்டி : கோத்தகிரி கோடநாடு கொலை வழக்கு விசாரணை, ஏப்., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.கோத்தகிரி கோடநாடு கொலை; கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில், நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராயினர். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் போலீசார் ஆஜராயினர். இதனை தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ள கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை, ஏப்., மாதம், 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.அரசு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில்,''இவ்வழக்கின் தற்போதைய விபரங்களை நீதிபதி கேட்டறிந்தார். மேலும், வழக்கு விசாரணையில் மற்றவர்கள் தலையிடுவதால், விசாரணை பாதிக்கப்படும் என, அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.விசாரணைக்கு கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை கேட்ட நீதிபதி, ஏப்., 22ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்திரவிட்டார்,'' என்றார். இதில், எதிர்தரப்பு வக்கீல் விஜயன் ஆஜரானார்.
10 hour(s) ago
11 hour(s) ago