உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

கூடலுார்; முதுமலை கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு, கூடலுார் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்து, 'போதை பழக்கத்தை மாணவர்களிடமிருந்து ஒழிப்பது; அதில் பெற்றோர்களின் பங்கு; மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெறுவது,' குறித்து விளக்கினார். தொடர்ந்து, மாணவர்கள், 'லட்சியத்துடன் செயல்படுவேன்; அந்த லட்சியத்தை நினைவாக்க பாடுபடுவேன்,' என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். முகாமில், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை