உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காயங்களுடன் தவித்த சிறுத்தை பூனை; மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறை

காயங்களுடன் தவித்த சிறுத்தை பூனை; மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறை

பந்தலுார் : பந்தலுார் அருகே பொன்னானி பகுதியில் சாலை ஓரத்தில், உடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுத்தை பூனையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.பிதிர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, பொன்னானி சாலை ஓரத்தில் நேற்று காலை, சிறுத்தை பூனை ஒன்று உடலில் காயங்களுடன், உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனச்சரகர் ரவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து வனச்சரகர் தலைமையில் வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுத்தை பூனையை மீட்டு வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 'உடலில் காயங்கள் சரியானவுடன், வனப்பகுதியில் விடுவிக்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.சிறுத்தை பூனை காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்த, பொது மக்களுக்கு வனத்துறையினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்