| ADDED : ஜன 21, 2024 07:25 AM
ஊட்டி : மத்திய அரசு, புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. அதன்படி, 'விபத்து ஏற்படுத்தி, தப்பி செல்லும் டிரைவர்களுக்கு, 10 ஆண்டு சிறை அல்லது 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சட்டத்தை கண்டித்து, சில நாட்களாக, தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை லாரி ஓட்டுனர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில், 350 லாரிகள் இயங்காததால், ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்தது.ஊட்டி அனைத்து வணிகர் சங்க தலைவர் ராஜா முகமது கூறுகையில், ''ஊட்டி மார்க்கெட்டுக்கு நாள்தோறும், 50 - 60 டன் காய்கறி வரத்து இருக்கும். நேற்று தோட்டங்களில் அறுவடையான, 15 டன் காய்கறி மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்டது,'' என்றார்.