உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

அன்னுார் : அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.அன்னுாரில், 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில், 2 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த டிச. 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் தினசரி மண்டல பூஜை நடந்தது.மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு, விஸ்வக் சேனா பூஜை, சங்கல்பம், புண்ணியஹாவாசனம், அனைத்து சுவாமிகளுக்கும் திருமஞ்சனம், கலச ஆராதனை, சாந்தி ஹோமம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது.கரி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக அருள் பாலித்தார். திருக்கோவில் நற்பணி மன்றத்தினர், குலதெய்வத்தினர், என, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை