| ADDED : டிச 31, 2025 07:57 AM
ஊட்டி: ஊட்டியை சேர்ந்த அரசு ஊழியர் சைக்கிளிங் போட்டியில் தேசிய, உலக அளவில் பங்கேற்று பதக்கங்களை வென்றார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, ஹில் பங்க் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத், சைக்கிளிங் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், மாவட்ட, மாநிலம் என, பல்வேறு போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். கடந்த, 6ம் தேதி 'சைக்கிளிங் பெடரேஷன் ஆப் இந்தியா' வாயிலாக ஒடிசா மாநிலத்தில் நடந்த, 30வது தேசிய அளவிலான , 50 கி.மீ., சீனியர் பிரிவிற்கான சைக்கிளிங் பங்கேற்று தங்கம் வென்றார். அதே போல நெதர்லாந்து நாட்டில் உலக அளவில் நடந்த சைக்கிளிங் போட்டியில் பதக்கம் வென்றார். ஸ்ரீநாத் கூறுகையில், ''மாநில அரசு வாயிலாக போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றேன். தேசியம் மற்றும் உலக அளவில் நடந்த சைக்கிளிங் போட்டியில் வென்று அதன் வாயிலாக பெற்ற பதக்கங்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன். அரசின் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் வாயிலாக ஊட்டி வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறேன்,''என்றார்