மருத்துவ முகாம்.
பந்தலுார்: பந்தலுார் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் இணைந்து, பத்தாம் நம்பர் பழங்குடியினர் கிராமத்தில் இலவச சித்தா மருத்துவ முகாமை நடத்தின. காந்தி சேவை மையம் தலைவர் நவ்ஷாத் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசினார். சித்தா மருத்துவ அலுவலர் கிறிஸ்டோபர் கருணாகரன், இயற்கை மற்றும் யோகா மருத்துவர் நிரஞ்சனா ஆகியோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை வழங்கினர். இலவசமாக மருந்து வழங்கப்பட்டது.