உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு

 எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு

பந்தலுார்: எம்.ஜி.ஆர்., 38ம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது. நெல்லியாளம் நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., மன்ற நகர செயலாளர் கந்தசாமி வரவேற்றார். வார்டு செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின்., திருவுருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஐ.டி.,பிரிவு நகர செயலாளர் சதீஷ், அவை தலைவர் குமார், தலைமை கழக பேச்சாளர் ரவி, நிர்வாகிகள் சுப்ர மணியம், மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கவுன்சிலர் ஜாபீர் நன்றி கூறினார். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை