உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கதாபாத்திரங்களை ஆழமாக ஆராயும் மோஹினியாட்டம்; பிரபல கலைஞர் பேட்டி

 கதாபாத்திரங்களை ஆழமாக ஆராயும் மோஹினியாட்டம்; பிரபல கலைஞர் பேட்டி

பாலக்காடு: கதாபாத்திரங்களை ஆழமாக ஆராய்வது மோஹினியாட்டம். அதனால் ஏற்பட்ட ஆசை தான், மோஹினியாட்டத்தின் பக்கம் என்னை ஈர்த்தது என, பிரபல மோஹினியாட்ட கலைஞர் சுனந்தா நாயர் தெரிவித்தார். கேரள மாநிலம், பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், கலை அமைப்பான ஸ்வரலயா சார்பில், வரும், 31ம் தேதி வரை 'சூரியா' எனும் நடன சங்கீத உற்சவம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வந்த பிரபல மோஹினியாட்ட கலைஞர் கலைஞர் சுனந்தா நாயர் நிருபர்களிடம் கூறியதாவது: கதாபாத்திரங்களை ஆழமாக ஆராய்வது மோஹினியாட்டம். அதனால் ஏற்பட்ட ஆசை தான், மோஹினியாட்டத்தின் பக்கம் என்னை ஈர்த்தது. கதகளியைப் படித்தது இதற்கு பயனுள்ளதாக இருந்தது. எனது, 40 வருட நடன பயணத்தின் இடையே, சிறந்த காட்சிகளின் தொகுப்பினை இங்கு வழங்குகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். பரதநாட்டிய கலைஞர் கீர்த்தி ராம் கோபால் கூறியதாவது: நடன வடிவங்களை குறுகிய நேரத்தில் நிகழ்த்தும்போது சிறந்து விளக்க முடியாது. பரதநாட்டியம் அதன் முழு வடிவத்தில் நிகழ்த்தப்படும் போது தான், அதன் தாளத்தையும் அழகையும் பார்வையாளர்களுக்கு அளிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை