உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எல்லையில் சேதமடைந்து வரும் சாலை மூன்று மாநில வாகன ஓட்டுநர்கள் அவதி

எல்லையில் சேதமடைந்து வரும் சாலை மூன்று மாநில வாகன ஓட்டுநர்கள் அவதி

கூடலுார்: தமிழக-கேரள எல்லையில் உள்ள, கூடலுார், கீழ்நாடுகாணியில் சேதமடைந்து வரும், சாலை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார், நாடுகாணி பகுதியில் இருந்து, கேரளா செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, தமிழகம்-கேரளா-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும்.நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களை தவிர்த்து, கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணியில் உள்ள நுழைவு வரி வசூல் மையத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ.,துார சாலை, பல இடங்களில் சேதமடைந்துள்ளது; தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. அப்பகுதிகளை சீரமைக்கப்படாததால், அதனை கடந்து செல்ல வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நுழைவு கட்டணம் வசூல் செய்தும், சேதம் அடைந்த சாலையை பராமரிக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுநர்கள், சுற்றுலா பயணங்கள் அதற்கு அடைந்துள்ளனர்.ஓட்டுநர்கள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து நீலகிரி வரும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், சாலை பராமரிப்பு இன்றி, பல இடங்கள் சேதமடைந்து வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.இச்சாலையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ