மேலும் செய்திகள்
புனித சந்தனமாதா ஆலய மின் அலங்கார தேர் பவனி
28-Jul-2025
ஊட்டி; நீலகிரியின் முதல் கத்தோலிக்க தேவாலயமான, ஊட்டி மேரீஸ் ஹில் துாய மோட்சராகினி பேராலயத்தின், 187 வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள, புனித திரெசன்னை ஆலய பங்கு குரு ஹென்ரி ராபர்ட் தலைமையில், பங்கு குரு பெனடிக்ட், அருட்பணி ஞானதாஸ், உதவி பங்கு குரு டினோ பிராங்க் ஆகியோர் முன்னிலையில் திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு பின் ஆலயத்தில் இருந்து திருவிழா கொடி, மோட்சராகினி திரு சுரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டு அன்னைக்கு வரவேற்பு இசையுடன் ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இன்று, முதல் நாள்தோறும் மாலை சிறப்பு ஜெபமாலை நவநாள் மறையுரை திருப்பலி நடைபெறுகிறது. 15ம் தேதி 'அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, பங்கின் திருவிழா நாட்டின் சுதந்திர விழா,' என, முப்பெரும் விழா நடக்கிறது. அதில், மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், ஆயர் செயலர் இம்மானுவேல் அந்தோணி ,சிஜோ ஜார்ஜ் எடக்குடியில் மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை பங்கு குருக்கள், இளைஞர் குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
28-Jul-2025