மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பேரணி
25-Jan-2025
ஊட்டி; ஊட்டியில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஆண்டுதோறும் ஜன., மாதம், தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஊட்டி ரயில் நிலைய முகப்பு வாயிலில் துவங்கிய பேரணியை, கலெக்டர் லட்சுமிபவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு, சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியில், 'ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டு பிற உயிர் காப்பீர்; அதிவேகமே விபத்துக்கு காரணம்' உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இப்பேரணி, எட்டின்ஸ் சாலை வழியாக, ஏ.டி.சி., பகுதியில் நிறைவடைந்தது. அதில், யூனிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் டிரைவர்கள், சாலை பணியாளர்கள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் என, 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், உதவி கோட்ட பொறியாளர் ஜெயப்பிரகாஷ், உதவி பொறியாளர்கள் பிரகாஷ், பாலச்சந்தர் உட்பட, சாலை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
25-Jan-2025