உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடர் மழை காரணமாக வெறிச்சோடிய நேரு பூங்கா

தொடர் மழை காரணமாக வெறிச்சோடிய நேரு பூங்கா

கோத்தகிரி : கோத்தகிரி நேரு பூங்கா தொடர் மழை காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது.கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வரும் இப்பூங்காவின் புல்தரை நேர்த்தியாக வெட்டப்பட்டு, பசுமையாக காட்சியளிக்கிறது. நாள்தோறும், நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிள், உள்ளூர் மக்கள் குறிப்பாக, சிறுவர்கள் பூங்காவுக்குள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால், பூங்காவில் பார்வையாளர்களில் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பகல் மழை ஓய்ந்து நிலையிலும், பூங்காவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை