| ADDED : டிச 31, 2025 07:54 AM
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புதிய வரவான ஆர்கிட் மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு, 250 ரகங்களில் பல லட்சம் மலர் வகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஆர்கிட் மலர்களும் அடங்கும். இந்நிலையில், பூங்காவில், புது வரவான, 'சிம்பிடியம்' என்ற ஆர்கிட் மலர்கள் பூத்துள்ளன. இதனை, சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டுக்களித்து செல்கின்றனர். அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி அலுவலர் பிபீதா கூறுகையில், 'இந்த ஆர்கிட் மலர்கள், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் நேபாளம் போன்ற பகுதிகளில் அதிகம் வளரும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், முதன் முறையாக, 150 நாற்றுகள் வரவழைக்கப்பட்டு, தற்போது பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்,'' என்றார்.