உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலூர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

பந்தலூர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

பந்தலூர் : பந்தலூர் அருகே முதிரக்கொல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முதுமலை புலிகள் காப்பகம், 'டச்வுட் பவுண்டேசன்' இணைந்து முதிரி கொல்லி பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாமினை நடத்தின. வனச்சரகர் குட்டன் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் மல்லேஷ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டாக்டர்கள் அவினாஷ், விஷ்ணு, பவுண்டேசன் மேலாளர் கார்த்திக் மற்றும் வனத்துறையினர், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.எருமாடு பகுதியில் யுவதரா கிளப், அஸ்வினி ஆயுர்வேதி சென்டர் இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்தினார்கள். கிளப் துணை தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். கிளப் நிர்வாகிகள் கிரீஷ், ஜோனப், ஷமீர், நாசர் உட்பட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்