உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம்

இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம்

ஊட்டி : ஊட்டி நகர இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் ஊட்டியில் நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நீலகிரி மாவட்ட படுக சமுதாய மக்கள் மற்றும் கலாசாரத்தை காக்கும் விதமாக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியதற்கு வரவேற்பு தெரிவிப்பது; பாரம்பரியமிக்க படுகமொழி, உடைகளை பய­ன்­படுத்தி கலாசாரத்தை சீரழிக்கும் மதமாற்றத்தை தடுக்க வலியுறுத்துவது; விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான அறிமுக கூட்டம் 5ம் தேதி நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊட்டி நகர செயலாளர் ராஜேந்­திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் பாலமுரளி, விஜய், நந்தகுமார் முன்னிலை வகித்தனர். தாலுகா பொறுப்பாளர் சந்தோஷ், விஸ்வா, நீலகிரி மாவட்ட செயலாளர் மஞ்சுநாத், கோவை நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை