உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பதவி உயர்வு வழங்க வேண்டும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு வழங்க வேண்டும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி: 'ஊட்டியில் பணி மூப்பில் உள்ள செவிலியர்களுக்கு, உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாண்டி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'பனி மூப்பு பட்டியலில் உள்ள செவிலியர்களுக்கு உடனடியாக செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்;நிரந்தர செவிலியர் காலி பணியிடங்களில் எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய செவிலியர் கண்காணிப்பாளர், நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து, செவிலியர்களுக்கு பதிவு உயர்வுடன், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்;அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 6 நிரந்தர செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்; ஒரு சுகாதார மாவட்டத்திற்கும், மாநகராட்சிக்கும் ஒரு செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 1 பணியிடத்தை புதிதாக தோற்றுவிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.மாநில தலைவர் பால்பாண்டியன், பொருளாளர் தமிழ்செல்வி, நிர்வாகிகள் கற்பகம் மற்றும் சிந்தன் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை