உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி--தஞ்சாவூர் புதிய வழித்தட பஸ் இயக்கம் 12 புதிய பஸ்கள் ஒதுக்கீடு

ஊட்டி--தஞ்சாவூர் புதிய வழித்தட பஸ் இயக்கம் 12 புதிய பஸ்கள் ஒதுக்கீடு

ஊட்டி;ஊட்டி மண்டலத்தில், 13 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் புதிய வழித்தடத்திற்கு நேற்று முதல் பஸ் இயக்கப்பட்டது. ஊட்டி மண்டலத்திற்கு, 13 புதிய பி.எஸ்., 6 மாடல் பஸ்கள் ஒதுக்கப்பட்டது. அதில், ஊட்டியிலிருந்து திருப்பூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு புதிய வழித்தடத்திற்குகான பஸ் இயக்கும் நிகழ்ச்சி, நேற்று பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்தது. எம்.பி., ராஜா, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று தஞ்சாவூருக்கு செல்லும் புதிய பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தனர். அதன்படி, ஊட்டி மண்டலத்திற்கு, 12 பி.எஸ்-6., மாடல் பஸ்கள் ஒதுக்கப்பட்டது. அதில், 'ஊட்டி-பெங்களூரு, ஊட்டி-துறையூர், 2 பஸ்கள்; ஊட்டி-மதுரை, ஊட்டி--பாலக்காடு 2 பஸ்கள்; ஊட்டி-திருச்சி, கோத்தகிரி-பெரம்பலுார், கூடலுார்-- திருச்சி, மேட்டுப்பாளையம்- -ராஜபாளையம், 2 பஸ்கள்; மேட்டுப்பாளையம்-காரைக்குடி,' என, மேற்கண்ட வழித்தடத்திற்கு புதிய பஸ்கள் ஏற்கனவே சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் வழித்தட பஸ் ஊட்டியில் மாலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு செல்கிறது.பின், காலை, 7:15 மணிக்கு தஞ்சாவூரில் புறப்பட்டு, மாலை, 5:45 மணிக்கு ஊட்டிக்கு வந்தடைகிறது. நிகழ்ச்சியில், கலெக்டர் அருணா, பொதுமேலாளர் நடராஜ், உதவி பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Amarakavi Nathan
ஆக 17, 2024 11:09

தேங்க்ஸ் டு.ஆஃபீஸ்ர்ஸ்.அண்ட் MINISTERS. THANJAVUR.PEOPLES


Amarakavi Nathan
ஆக 17, 2024 11:06

தஞ்சாவூர் டு. ஊட்டி புதிய பஸ் வழிதடங்கள் ஏற்பாடு செய்து அரசு போக்குவரத்துக்கும். அரசுக்கும் அமைச்சர் பெருமக்கள் - அதிகாரிகள் ஆகியோருக்கு தஞ்சை மாவட்ட பொதுமக்கள் சார்பாக நன்றி.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை