உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பு இல்லாத ஊட்டி டேவிஸ் பூங்கா வெறிச்

பராமரிப்பு இல்லாத ஊட்டி டேவிஸ் பூங்கா வெறிச்

ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஊட்டிக்கு ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் கண்டுகளிக்க, தோட்டக்கலை துறை சார்பாக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்கள் உள்ளன. இந்நிலையில், ஊட்டி நகராட்சி சார்பாக பராமரிக்கப்படும், 9 சாலையோர பூங்காக்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளன. அதில், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள நகராட்சியின் முதல் கமிஷனர் டேவிஸ் நினைவாக உள்ள டேவிஸ் பூங்காவில், மலர் செடிகள் நடவு செய்யாமல் உள்ளதால், ஊட்டியில் பூக்களே இல்லாத பூங்கவாக மாறி உள்ளது. இதனால், இங்கு உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகள் யாரும் வராமல் வெறிச்சோடி காணப் படுகிறது. எனவே, ஊட்டி உள்ள நகராட்சி பூங்காக்களை பராமரித்து வண்ணமயமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ