உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஊட்டியில் காங்., கமிட்டி சார்பில் அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம்

 ஊட்டியில் காங்., கமிட்டி சார்பில் அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம்

ஊட்டி: ஊட்டியில், காங்., கமிட்டி சார்பில் அமைப்பு மறுசீரமைப்பு இயக்க கூட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய காங்., கமிட்டி சார்பில் அமைப்பு மறுசீரமைப்பு இயக்க கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊட்டி தமிழ்நாடு ஓட்டல் கூட்ட அரங்கில் கூட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில், அகில இந்திய காங்.,கமிட்டி செயலாளர், ரெஹானா ரியாஸ் செஸ்தி பங்கேற்று புதிய மாவட்ட தலைவர் தேர்வு குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் கூட்டணி கட்சியுடன் இணைந்து செயல்பட தேவையான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ரெஹானா ரியாஸ் செஸ்தி நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்ட தோறும்புதிய மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், 6 பேரை தேர்வு செய்து, அவர்களின் நிறை குறைகள் குறித்து, காங்., மேலிடத்திற்கு டிச., 8-ம் தேதிக்குள் அனுப்பப்படும். இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய மாவட்ட தலைவரை காங்., மேலிடம் தேர்வு செய்து அறிவிக்கும்,'' என்றார். முன்னாள் மாநில சிறுபான்மை அணி தலைவர் சித்திக், மாநில பொது செயலாளர் முரளிதரன், நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ