உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நூறு நாள் வேலை திட்டம்; ஊராட்சி உறுப்பினர்கள் புகார்

நூறு நாள் வேலை திட்டம்; ஊராட்சி உறுப்பினர்கள் புகார்

பெ.நா.பாளையம்:நுாறு நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், 2022---23 நிதி ஆண்டுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி தலைமை வகித்தார். சமூக தணிக்கை ஆய்வு அதிகாரி சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வார்டு உறுப்பினர் வளர்மதி பேசுகையில், ''இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிஉள்ளது.நம் ஊராட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், 60 சதவீதம் நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. பல வார்டுகளில் பணிகளுக்கான தேவைகள் அதிகமாக உள்ளன'' என்றார்.வார்டு உறுப்பினர் ராஜாமணி பேசுகையில், ''இத்திட்டத்தில் பழைய ஆட்களுக்கே தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. புதிய ஆட்கள் பலர் வேலை இன்றி உள்ளனர். பாரபட்சம் இல்லாமல், அவர்களுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். சிலருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றனர்.கூட்டத்தில், ஒன்றிய மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியம், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை