மேலும் செய்திகள்
தேவர்சோலை அருகே மீண்டும் புலி தாக்கி பசு மாடு பலி
23 hour(s) ago
கூடலுார்: கூடலுார் அரசு தோட்டக்கலை பண்ணையில் பாழடைந்து பயனற்று கிடந்த, 20 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டதால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். கூடலுார் நாடுகாணி அருகே, பொன்னுார் அரசு தோட்டக்கலை பண்ணை, 45 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு, 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இங்குள்ள, நர்சரியில் தேயிலை, காபி, பாக்கு, குறுமிளகு, கிராம்பு உள்ளிட்ட விவசாய நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகின்றனர். தற்போது இவைகளுடன், பட்டர் புரூட், லிச்சி பழ செடிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களால், தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. குடியிருப்புகளும் பராமரிப்பின்றி விடப்பட்டது. பயன்படுத்தாமல் இடிந்து விழும் நிலையில் இருந்த குடியிருப்புகள் அகற்ற வலியுறுத்தி வந்தனர். இதற்கான நடவடிக்கை இல்லை. இந்நிலையில், 13ம் தேதி, ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய, மூன்று பெண் தொழிலாளர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து, அங்குள்ள பழமையான கட்டடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் இருந்த குடோன் உட்பட, 20 கட்டடங்களை இடித்து அகற்ற பரிந்துரை செய்தனர். தொடர்ந்து, பொக்லைன் உதவியுடன் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த கட்டடங்களை தோட்டக்கலைத் துறையினர் முடித்து அகற்றினர். தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் அரசு துறைக்கு சொந்தமான, இது போன்று பயன்படுத்த முடியாத பல கட்டடங்கள், நிழல் குடைகள் உள்ளன. இவைகள் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே, அத்தகைய கட்டடங்களை ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
23 hour(s) ago