உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்காவில் 30 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு பணி துவக்கம்

பூங்காவில் 30 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு பணி துவக்கம்

ஊட்டி;நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் நாட்களில், ஆண்டுதோறும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், பூங்காவின் அழகை கண்டு களித்து செல்கின்றனர். சாதாரண நாட்களிலும் கணிசமான சுற்றுலா பயணிகளின் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு கோடை விழா மே மாதம் நடக்கிறது. தாவரவியல் பூங்காவில், 5 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.சீசனை ஒட்டி பூங்காவை தயார்படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கோடை சீசன் நாட்களுக்குள் மலர் நாற்றுகளில், மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில், ஏற்கனவே மண் நிரப்பப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில், மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் கூறுகையில், ''கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 5 லட்சம் மலர்கள் தயார் செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 30 ஆயிரம் மண் தொட்டிகளில் மலர் நாற்று நடவுப்பணி துவங்கியுள்ளது. அடுத்த, இரு வாரங்களில் மீதமுள்ள தொட்டிகளில், நாற்று நடவு செய்து பராமரிக்கப்படும்.'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை