உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் நடைபாதையில் செடிகளால் சிரமம்

 ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் நடைபாதையில் செடிகளால் சிரமம்

ஊட்டி: ஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் நடைபாதையில், காட்டு செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் குன்னுார் சாலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. வாகன ஓட்டுனர் உரிமம் உட்பட, வாகனம் சம்பந்தப்பட்ட தேவைகளுக்காக, நுாற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். தவிர, இப்பகுதியில் உள்ள மருத்துவமனை, கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு இவ்வழியாக வழியாக சென்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், வாகன நெரிசல் மற்றும் விபத்தை தடுக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறுகிய நடைபாதையில், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, அகற்றப்படாமல் உள்ளது. இதனால, எதிரில் வருபவர்களுக்கு, ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும், காட்டு செடிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், நடைபாதை காட்டு செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ