உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நுாலக வார விழா போட்டி மாணவர்களுக்கு பரிசு

 நுாலக வார விழா போட்டி மாணவர்களுக்கு பரிசு

குன்னுார்: எடப்பள்ளி நுாலகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தது. குன்னுார் எடப்பள்ளி கிளை நுாலகத்தின், 58வது தேசிய நூலக வார விழா எடப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எடப்பள்ளி ஊர் பிரமுகர் மகாதேவன் தலைமை வகித்து பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டினாள், ஆசிரியை சகுந்தலா தேவி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நுாலகர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ