உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரவக்கண்டி அணையில் மீன் பிடிக்கும் தடை தொடரும்

மரவக்கண்டி அணையில் மீன் பிடிக்கும் தடை தொடரும்

கூடலுார்:'மசினகுடி மரவக்கண்டி அணையில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வழியாக கல்லல்லா ஆறு செல்கிறது. சிங்கார நீர்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தண்ணீரும் இதில் கலந்து செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே மரவக்கண்டி அணை அமைந்துள்ளது. இங்கு தமிழக மீன்வளத்துறை சார்பில், மீன் பிடித்து விற்பனை செய்யும் பணி நடந்து வந்தது.இந்நிலையில், சுழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மீன் பிடிக்க கடந்த ஆண்டு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நடைமுறைகள் உள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'இந்த அணையை ஒட்டிய பகுதிகளுக்கு, சீசன் காலத்தில் வெளியூர்களில் இருந்து பறவைகள் வந்து தங்கி செல்கிறது. மேலும், இங்குள்ள மீன்களை தவிர, வெளியில் இருந்து வேறு மீன் குஞ்சுகளை விட்டு செல்கின்றனர். இதனால், இப்பகுதியை சார்ந்துள்ள மீன்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதனால், மீன்களை விடவும், மீன்கள் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை