உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து போராட்டம்

குன்னுார்; வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில், உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து, குன்னுார், ஊட்டியில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் மாநில முழுவதும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்திலும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் நந்த குமார் தலைமை வகித்தார். இதேபோல, குன்னுார் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பு நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயலாளர் அப்துல் மஜீத், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி சதீஷ், நில அளவைப் பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் காதர் உட்பட பலர் பேசினர். அதில், 'ஊழியர்களின் பணி பாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' உட்பட, 9 அம்சகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !