மேலும் செய்திகள்
கோடை விடுமுறை துவக்கம் சிறப்பு பஸ்களில் கூட்டம்
28-Apr-2025
கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட முதுமலை ஊராட்சி பகுதியில் வசித்து வரும், 658 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாற்றிடம் திட்டத்தின் கீழ், மூன்று கட்டமாக வெளியேற்றும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், அங்குள்ள முதுகுழி பழங்குடி கிராம மக்கள், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, வெளியேற மறுத்து வருவதுடன், கிராமத்துக்கான போஸ்பாரா - முதுகுழி சாலையை சீரமைக்க வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தி வந்தனர்.தொடர்ந்து, 2024 நவம்பரில், 65 லட்சம் ரூபாய் செலவில் மண் சாலை, சிமென்ட் சாலையாக சீரமைக்கப்பட்டது. இப்பகுதிக்கு அரசு பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தினர். இதை ஏற்று நேற்று காலை, 7:00 மணிக்கு கூடலுாரில் இருந்து முதுகுழி கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. போஸ்பாரா சங்கிலிகேட் பகுதியில் பணியில் இருந்த வன ஊழியர்கள், 'பஸ்சை அனுமதிப்பது குறித்து, அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை' எனக்கூறி, முதுகுழிக்கு பஸ் செல்ல அனுமதி மறுத்தனர். அதிருப்தியடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.கூடலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் மறியலுக்கு ஆதரவு தெரிவித்து, அதிகாரிகளிடம் பேசினார். தொடர்ந்து, வருவாய், போலீஸ், வனத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில், சமூக தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மதியம், 2:30 மணிக்கு, பஸ் முதுகுழிக்கு சென்றது.
28-Apr-2025