உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

பந்தலுார், ; பந்தலுார் அருகே கப்பாலா, அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு சார்பில், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களின், ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்க்கும் வகையில் சிறு தானியங்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கப்பாலாவில் நடந்த நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமையில், டாக்டர்கள் சுகைல், ஜனார்த்தனன், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்று, தாய்மார்களுக்கு அறிவுரைகள் வழங்கி ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். அய்யன் கொல்லியில் நடந்த நிகழ்ச்சியில், டாக்டர்கள் ரக்ஷந்தா,ராதிகா மற்றும் செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் தாய்மார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ