நலத்திட்ட உதவிகள் வழங்கல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஊட்டி,; நீலகிரி மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில், டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின், 134வது பிறந்த நாள் விழா, ஊட்டியில் நடந்தது. எச்.பி.எப்.,ல் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், காந்தளில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஊட்டி பட்டியல் அணி மண்டல தலைவர் பிரசாந்த் தலைமை வகித்தார். மாவட்ட பா.ஜ., மாவட்ட தலைவர் டாக்டர் தர்மன், முன்னாள் தலைவர் மோகன்ராஜ், ஊட்டி நகர தலைவர் ரித்து கார்த்திக் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொது செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் பாப்பண்ணன், வக்கீல் அணி உமா, பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.