உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மேட்டுப்பாளையம் சாலையில் மழை கால அபாயம்; தடுப்பு சுவரில் விரிசல்: ஆய்வு செய்வது அவசியம்

மேட்டுப்பாளையம் சாலையில் மழை கால அபாயம்; தடுப்பு சுவரில் விரிசல்: ஆய்வு செய்வது அவசியம்

குன்னுார் : குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையில், 6வது வளைவு அருகே தடுப்பு சுவரில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பருவமழை தொடரும்பட்சத்தில் சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார்- -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதில், 6வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், 30 அடி உயரத்திற்கு மேல் பிரம்மாண்ட தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆற்றோரமாக உள்ள இந்த இடம் சாலை பகுதியில் சிறியளவில் உள்வாங்கி, லேசான விரிசலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே இடத்தில் ஏற்பட்ட விரிசலை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைத்தனர். எனினும் மீண்டும் சிறிது, சிறிதாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வடகிழக்கு பருவ மழை அதிகரித்தால், இப்பகுதி இடிந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மழை தீவிரம் அடைவதற்கு முன்பு, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ