| ADDED : ஜன 15, 2024 10:48 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் வயநாடன் செட்டி சமுதாய சங்கம் சார்பில், உறவுகள் சந்தித்த சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார். சங்க தலைவர் வேணுகோபால் தலைமை வகித்து, சமுதாய மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியம் மற்றும் எதிர்கால சந்ததிகளை சிறப்பாக வழி நடத்துவது குறித்து விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, நிர்வாகி வாசு நிகழ்ச்சியை துவக்கி பேசினார். மனநல ஆலோசகர் டாக்டர் அனுாப் பங்கேற்று, 'கடந்த காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும், மூத்தவர்கள் வழி நடந்ததால் கிடைத்த பயன்கள் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் இளைய தலைமுறையினர் வழி தவறி போவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து,' விளக்கம் அளித்தார். மேலும், சமுதாய மக்கள் சிறப்பாக வாழும் வழிகள் குறித்து விளக்கியதுடன், பெற்றோரின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து வயநாடன் செட்டி சமுதாய கலாச்சார நடனங்கள் இடம்பெற்றது.இதில், பங்கேற்ற சமுதாய உறவினர்கள் சந்தித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. மகளிர் அணி தலைவி யசோதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிர்வாகி கோவிந்தன் நன்றி கூறினார்.