உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின்கம்பி மீது சாய்ந்த மூங்கில்கள் அகற்றினால் ஆபத்தை தடுக்கலாம்

மின்கம்பி மீது சாய்ந்த மூங்கில்கள் அகற்றினால் ஆபத்தை தடுக்கலாம்

கூடலுார், ; 'கூடலுார் தொரப்பள்ளி இருவயல் கிராமம் வழியாக செல்லும் மின் கம்பி மீது சாய்ந்துள்ள மூங்கில்களை அகற்ற வேண்டும்.கூடலுார் தொடுப்பள்ளி அருகே இருவயல் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு, மின் துறை சார்பில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, இவ்வழியாக செல்லும் மின் கம்பி மீது மூங்கில்கள் சாய்ந்து, ஆபத்தான நிலையில் உள்ளன. அவ்வழியாக செல்லும், நடைபாதையை மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மக்கள் கூறுகையில், 'மின் கம்பிகளால் ஆபத்து ஏற்படும் முன், அதன் மீது சாய்ந்துள்ள மூங்கில்களை உடனடியாக அகற்ற வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை