| ADDED : நவ 19, 2025 04:13 AM
குன்னுார்: குன்னுாரில், பீரோவில் வைத்திருந்த, 31பவுன் நகை திருட்டு போனதாக கூறிய புகாரின் பேரில், தீவிர விசாரணை நடத்திய நிலையில், வீட்டிலேயே நகைகள் இருந்ததாக தெரிவித்ததால், போலீசார் 'அப்செட்' ஆகினர். குன்னுார் பழைய ஆஸ்பத்திரி லைன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், உமாராணி தம்பதி. இவர்கள் கடந்த மாதம் உறவினர் இறப்புக்கு வெளியூர் சென்று திரும்பிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு, 'வீட்டு பீரோவில் வைத்த, 31 பவுன் வரை நகைகள் காணவில்லை,' என, குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், டி.எஸ்.பி., ரவி தலைமையில், போலீசார் அருகில் உள்ளவர்கள், வீட்டில் பணி புரிந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், வீட்டில் நகைகள் இருந்ததாக, போலீசாரிடம் உமாராணி வந்து தெரிவித்ததால், போலீசாரும் தக்க அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.