உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலம் அருகே சாலை சேதம்; ஓட்டுனர்கள் திண்டாட்டம்

பாலம் அருகே சாலை சேதம்; ஓட்டுனர்கள் திண்டாட்டம்

கூடலுார் : முதுமலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கார்குடி மற்றும் கல்லல்லா பகுதியில், புதிய பாலத்தை ஒட்டிய சாலை சேதமடைந்துள்ளதால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கார்குடி, கல்லல்லா பகுதியில், சேதமடைந்த பழைய பாலங்களுக்கு மாற்றாக, புதிய பாலங்கள் அமைக்க, 3.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் துவக்கப்பட்டது. வாகனம் சென்றுவர வசதியாக பாலத்தை ஒட்டி தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சேதமடைந்த பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. பருவ மழையின் போது தற்காலிக பாலத்தில் வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வந்தனர். புதிய பாலங்கள் பணிகள் நிறைவடைந்து, ஜூன் மாதம் வாகன போக்குவரத்து துவங்கப்பட்டது. ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், புதிய பாலங்களின் இரு புறமும் புதிதாக அமைக்கப்பட்ட சாலை, சேதமடைந்து வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலை, நீலகிரி மட்டுமின்றி, கர்நாடக, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். கார்குடி, கல்லல்லா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை ஒட்டி இருபுறமும் சிறிது துாரம் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து, வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை