| ADDED : பிப் 02, 2024 10:34 PM
குன்னுார்:அப்பர் குன்னுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.பேரணியை குன்னூர் டி.எஸ்.பி., குமார் துவக்கி வைத்தார்.பெட்போர்டில் துவங்கிய பேரணி மவுன்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக தீயணைப்பு நிலைய வளாகத்தை அடைந்தது.அதில், சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது; ஹெல்மெட் அணிவதன் அவசியம்; சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில், சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்கள் இல்லாத பயணம். மலை பாதையில் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் இயக்கி விபத்துகளை தவிர்ப்பது என்பன உட்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிராவிடன்ஸ் கல்லுாரி மாணவியர், போலீசார் பங்கேற்றனர்.