உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

கூடலுார்; கூடலுாரில் தாயகம் திரும்பியோருக்கு 'ரெப்கோ' வங்கி சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூடலுார் நர்த்தகி திருமண மண்டபத்தில், ரெப்கோ வங்கி மற்றும் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், தாயகம் திரும்பிய மக்களுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ரெப்கோ வங்கி கிளை மேலாளர் லோகநாதன் வரவேற்றார். ரெப்கோ வங்கியின் தலைவர் சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்து, தாயகம் திரும்பிய மக்களுக்கு, செய்து வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, 180 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம்; 189 பயனாளிகளுக்கு மருத்துவ உதவி தொகை; 212 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை; தாயகம் திரும்பிய மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்; சிறு விவசாயிகளுக்கு பசுத்தேயிலை பறிக்கும் இயந்திரம்; மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு குடிநீர் சேமிப்பு தொட்டிகள்,' உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில், பேரவை பிரதிநிதிகள் கணேசன், கலைச்செல்வன், ஞானபிரகாசம், லோகநாதன், வங்கி ஊழியர்கள், பயனாளிகள் பங்கேற்றனர். பந்தலுார் வங்கி கிளை மேலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி