மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் இளைஞர் மரணம்
09-Sep-2025
ஊட்டி:மஞ்சூர் அருகே வாகன விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஊட்டி அருகே எடக்காடு காந்திகண்டி பகுதியை சேர்ந்த பால்ராஜ் , இவரது மகன் ஸ்ரீசாந்த்,16. கோவையில் உள்ள ஒரு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கோவைக்கு வர திட்டமிட்டிருந்தார். அதற்கு முன்னதாக, எடக்காடு பள்ளியில் படிக்கும் தனது சகோதரனை பள்ளியில் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த 'பிக்-அப்' வாகனம் மீது மோதி துாக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த ஸ்ரீசாந்த் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மஞ்சூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, எஸ்.ஐ., பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
09-Sep-2025