உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் விதிமீறிய கட்டடத்துக்கு மீண்டும் சீல்

குன்னுாரில் விதிமீறிய கட்டடத்துக்கு மீண்டும் சீல்

குன்னுார்: குன்னுாரில் வருவாய் துறை இடத்தில் கட்டிய கட்டடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் இரண்டாவது முறையாக 'சீல்' வைத்தனர்.குன்னுார் பகுதியில் சமீப காலமாக விதிமீறிய மற்றும் அனுமதி இல்லாத கட்டடங்கள் கட்டுவது அதிகரித்துள்ளது. விதிமீறி கட்டப்படும் கட்டடங்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.கடந்த, 2022ம் ஆண்டு நவ., மாதம் குன்னுார் பெட்போர்டு, உழவர் சந்தை அருகே சோலை பகுதி என குறிப்பிட்டுள்ள வருவாய் துறை இடத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த சிலரால் புதிதாக கட்டடம் கட்டப்பட்டது.இது தொடர்பான புகாரின் பேரில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து 'சீல்' வைத்தனர்.எனினும் சில நாட்களில், சீல் அகற்றப்பட்டு மீண்டும் இங்கு கட்டுமான பணி நடந்தது.இந்நிலையில், ஊட்டியில் நடந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி, தொழிலாளர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, நேற்று இந்த கட்டடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் இரண்டாம் முறையாக, சீல் வைத்தனர்.சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,''குன்னுாரில் பல கட்டடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து சென்ற பிறகு, சில நாட்கள் கழித்து சீல் அகற்றி பல கட்டடங்கள் முழுமையாக கட்டப்பட்டுள்ளது. மவுன்ட் ரோடு, மவுன்ட் பிளசன்ட், காட்டேரி, உள்ளிட்ட இடங்களில், சில அரசியல்வாதிகளால், கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட்டு, தற்போது கடைகளாகவும், காட்டேஜ்களாகவும் திறக்கப்பட்டுள்ளன. கண் துடைப்புக்காக சீல் வைக்காமல், விதிமீறலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை